Share on facebook
Share on telegram
Share on whatsapp

பேரழிவு பேரருள்.

2011-2012-இல் தொடர்ச்சியாக Japan -இல் நில நடுக்கமும் சுனாமியும் வந்து அது வரை இல்லாத அளவிற்கு உதிரிப் பாகங்கள் உற்பத்தித்  தடை பட்டது.  அதனால் இந்தியாவில் இறக்குமதி செய்து பயன்படுத்த பட்ட பல உதிரி பாகங்கள் குறிப்பாக வாகன தயாரிப்பாளர்கள் (automobile sector) மிகவும் பாதிக்கப்பட்டது.  அதனால் அவர்கள் இந்தியாவிலேயே மாற்று உதிரி பாகங்களை தேடினார்கள்.  அப்போது ஒவ்வொரு தொழிற்சாலை உள்ள ஊரிலும் ஒரு duplicate market, spurious market என்று இருக்கும்.  அங்கே போய் வாங்கி வருவார்கள்.  Duplicate என்று சொன்னாலும் அவை நல்ல தரத்துடனேயே இருக்கும்.  உதிரி பாகங்கள் தட்டுப்பாடு வந்த பிறகு BMW, Toyota , Honda போன்ற கம்பெனிகள்  இந்த பொருட்களை வாங்கிப் பார்த்தார்கள்.  உதிரி பாகங்களில் 70% வரை இந்தியாவிலேயே வாங்கலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். இதனால் Pune , Haryana , Bawal போன்ற இடங்களில் இருந்த சிறு பட்டறைகள் பெரிய தொழிலாக மாறின. அதுவே பிறகு 2014-இல் Make In India mission -க்கும், பிறகு 5 Trillion economy -க்கும் அடிப்படையாக அமைந்தது.

அதே போல December 2015-இல் சென்னையில் வந்த வெள்ளத்தில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பாதிக்கப்பட்டது. அது வரை பழைய தொழில் நுட்பத்திலேயே கருவிகளை ஒட்டிக்கொண்டிருந்த பலர் நவீன தொழிற்நுட்பத்திற்கு மாறினார்கள்.  இப்போது அதுவே Defence corridor -க்கு முக்கிய supply -ஆக மாறிவிட்டது. தொழிற்பேட்டையின் கட்டமைப்பில் நல்ல மாற்றம் தெரிகிறது. இது ஒரு இடத்தில் அழிவு என்பது இன்னோரு இடத்தில வளர்ச்சி என்பதை காட்டுகிறது.  ஒரு முன்னேற்றத்திற்கான தடையை வாழ்வு அழிக்கின்றது என்பது   அழிவின் பின் உள்ள தத்துவம்.

இந்த தத்துவத்தை விளக்கும் நிகழ்ச்சியை அன்னை தான் வளர்த்த பூனை குட்டிப் போட்டபோது நடந்ததை சொல்லியிருக்கிறார். பூனை தான் போட்ட குட்டிகளில் இரண்டு முடமாக இருந்ததை கண்டு அவை வாழ்வில் பிழைக்க முடியாது என்பதை கண்டு அதன் மீது உட்கார்ந்து அந்த இரண்டு குட்டிகளையும் கொன்று விட்டது. 

சில உயர்ந்த நலத்திற்கு சில விஷயங்கள் அழிக்கப்பட வேண்டியது அவசியம்.  அது அடுத்த நிலைக்கு செல்ல அவசியம் என்கிறார் கர்மயோகி அவர்கள்.  கார்  வந்த பிறகு குதிரை வண்டி, ரிக்ஷாபோன்றவை போனதற்கு நாம் வருத்தப்படவில்லை.  விஞ்ஞான முன்னேற்றத்தில் பல விஷயங்கள் அழிந்து புதிது தோன்றியிருக்கிறது. 

அது போல நம் முன்னேற்றத்திற்கு நாம் திருவுருமாற நேரம் வரும் போது உதாரணமாக போட்டி, பொறாமை, சோம்பல், திறமை குறைவு , அறிவு குறைவு , குணக்குறைவு  போன்றவை நமக்கு தடையான குணமாக இருக்கும் போது , ஒரு அழிவு வந்து பொறாமை உதார குணமாகவும் , சோம்பல் சுறுசுறுப்பாகவும், போட்டி ஒத்துழைப்பாகவும் திறமைகுறைவு திறனாகவும் , அறிவுக் குறைவு ஞானமாகவும் , குணக் குறைவு பண்பாகவும் மாறும் படி அமையும் .

ஆனால் கர்மயோகி அவர்கள் அதை அழிவு என்னும் வார்த்தையை உபயோகப்படுத்தாமல் விரயம் என்றே கூறுகிறார்.  இயற்கையில் விரயம் என்பதே இல்லை என்பது பகவான் கூறுவது.  பல்வேறு காரியங்களை ஒரு விரயம் மூலம் சாதிப்பதில் இயற்கைக்கு நிகர் இல்லை என்கிறார்.  புயல், வெள்ளம், பெருமழை, எரிமலை, தொற்று நோய்கள் என்று எல்லாவற்றிக்கு பின்னாலும் இயற்கையின் சமன் படுத்தும் நோக்கம் உள்ளது என்கிறார்.  கிராமத்து பணக்காரன் தன் மகன் ஐந்தாவது படிக்க town -இல் வீடு எடுத்து சமையல்காரனை வைத்து வளர்ப்பதும், ஒரு ஏழை கடன் வாங்கி தன் மகளுக்கு பாட்டு சொல்லிக்கொடுப்பதும் விரயம் போன்ற தோன்றினாலும், முதலாவது விரயம், இரண்டாவது வளர்ச்சி.  அந்த பாகுபாடு நமக்கு புரியவில்லை என்றால் வாழ்வு விரயம் மூலம் அந்த பாடத்தை கற்றுக்கொடுக்கிறது.

நாம் எப்பொழுதும் ஒரு பலனைக் கருதிச் செயல்படுவதால் நாம் எதிர்பார்ப்பது கிடைக்க வில்லையென்றால் அல்லது வேறு கிடைத்தால் அல்லது தாமதமானால் நாம் செய்தது எல்லாம் விரயம் என்று நினைக்கிறோம். மனம் எண்ணத்தால் செயல்படுகிறது. உடல், உணர்வால் செயல்படுகிறது. உடல், உணர்வு இரண்டும் பலன் தர, உடல்  உணர்வுக்குக்  கட்டுப்பட வேண்டும். கட்டுப்படாவிட்டால் செயலில்லை. செயல் இல்லாவிட்டால் பலன் இல்லை. கட்டுப்படாததறகுக் காரணம்  நம் குணம். சுபாவம். அதன் பின்னால் உள்ள நம் முன்முடிவுகள், ஆசைகள், அபிப்ராயங்கள். நம்மிடம் உள்ள குணங்கள்  எல்லாம் வாழ்வில் இருக்க தகுதியானவை அல்ல. குறிப்பாக நம் முன்னேற்றத்திற்குத் தடையானவைவற்றை அழிக்க நாமே முன் வரவேண்டும் . இல்லையென்றால் அவை தாமே அன்னையிடம் எங்களை அழித்து விடுங்கள் என்று கேட்டு கொள்வதாக சொல்கிறார் கர்மயோகி அவர்கள். அதுதான் நம் வாழ்வில் அழிவாக விரயமாக வருகிறது.

2007 இல்  கம்பனி ஆரம்பித்த நான் 2013 வரை கடன் வாங்காமலே வளர்ந்தேன். அதற்கு மேலும் வளர வேண்டும் என்றால்   பேங்க் அல்லது தனியார்  கடன் பெற்றே  ஆகவேண்டுமென்னும் நிலை. அதன் உண்மையை நான் புரிந்து கொண்டாலும் அது ஆழ்மன பயமாக மாறிவிட்டதால் அது பெரும் தடையாக இருந்தது. எல்லாம் சரியாக இருந்தால் கூட ஏதோ ஒரு காரணத்திற்க்காக லோன் கிடைக்காது. ஒரு முறை கோப்புகளை எடுத்துச் சென்ற  ஒரு மேனேஜர் விபத்தில் சிக்கினார். கர்மயோகி அவர்களின் ஸ்பெசல் ப்ளஸிங் பாக்கெட் அடிவயிற்றில் வைப்பதோ அவர் ரூம் முன் உள்ள அன்னை பகவான் அறையில் ஆறுமணி நேர காலிங்கில் அமர்வதோ எந்த பயனையும் அளிக்க வில்லை.  கடனைப்பற்றிய பயம் அந்த அளவிற்கு என் உடலுடன் , இயற்கையுடன் ஊறி விட்டது. 2015 டிசம்பர்-ல்  வெள்ளம் வந்து பேரிழைப்பு ஏற்பட்டபோது அதிக பணம் தேவை என்னும் நிலை வந்த போது – என்னை  அறியாமலேயே யார் பணம் கொடுத்தாலும், யார் கிரெடிட் கொடுத்தாலும் வாங்கும் மன  நிலைக்கு   வந்து விட்டேன். அதன் பின் மூன்று வருடங்களில் முதல் எட்டு வருடங்களை விட அதிகமாக வளர்ந்தேன்.

இயற்கையில் விரயம் இல்லை என்பது போல வாழ்விலும் விரயம் இல்லை.  பணம் விரயமானால் அறிவும் வளரும். முயற்சி விரயமானால் திறமை வளரும்.  வாழ்வில் அறிவு, உணர்வு ஆகியவற்றின் அழிவு ஆன்மாவின் வளர்ச்சி.  இப்படி எது விரயம் என்று நினைத்தாலும் அது அடுத்த உயர்ந்த நிலையில் பலன் தரவே இருக்கும். அது என்னவென்று நாம் சிந்தித்து பார்த்தால் அதன் பின் உள்ள முன்னேற்றம் தெரியும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »