இத்தகைய attachemnt -இல் இருந்து detachment -க்கு வர கர்மயோகி அவர்கள் சொல்லும் சில வழிகள் :
1. எதிர்பார்ப்பில்லாத செயல்.
2. முதல் நிலையில் உணர்வும், உடலும் , நம் அறிவை பாதிக்காத அளவு அவை இரண்டிலிருந்தும் வெளியே வருதல். உதாரணம் – ஆசை, உணர்ச்சி வசப்படுவது, impulsiveness , உத்வேகம், துடிப்பு, யோசிக்காமல் செய்வது, வேலைக்காக அல்லது மனிதர்களுக்காக செய்வது என்பது போன்ற விஷயங்களிலிருந்து வெளியே வருவது.
3. அடுத்தது அறிவை ஆன்மாவின் பண்புகளை ஏற்க சொல்லி வற்புறுத்தி அதை ஆன்மாவின் கையில் கொடுப்பது .
4. அதன் மூலம் perfection – வெளியில் அதற்கான மனப்பான்மையில் உணர்வில் ஒரு செம்மையைக் கொண்டு வருவது.
5. அதன் மூலம் நம்மை நாம் அறிந்து இந்த தளத்திலிருந்து அடுத்த தளத்திற்குச் செல்வது, பரிணாமத்தில் முன்னேறுவது.
இதை செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளது :
நம் இன்றைய நிலைக்குக் காரணம் நம் மனப்பான்மை, நம் தேவைகள், நம் அபிப்ராயங்கள், நம் விருப்பத் தேர்வுகள், அதை ஒட்டிய நம் முடிவுகள் என்பதை புரிந்துக் கொண்டு அதுவே நம்மை வரையறைக்குள் வைத்திருக்கிறது என்பதைப் புரிந்துக் கொண்டு அதிலிருந்து வெளியே வர நினைப்பது detachment – ஐத் தரும். நாம் அகந்தையின் தொடர்பிலேயே இருக்கிறோம், உயர் சித்தத்தின் ஆன்மாவின் தொடர்பில் இல்லை, நம் தேவை ஆன்மாவே என்று நினைப்பது detachment -ஐ த் தரும்.
மற்ற மனிதர்கள், உறவுகள், சமூகம், ஆகியவற்றில் நம் வெளிப்பாடு, ஒருமை, அது தொடர்பான நம் மனப்பான்மை, நோக்கம், ஆகியவற்றை ஆராய்ந்தால் நம் சுயநலம், பிரிவினைப் புரியும். முன்னேற்றத்திற்கு அது வழியல்ல என்பது புரிந்தால் detachment வரும்.
இது இரண்டும் புரிந்தால் நாம் supramental view , அதிமனப்பார்வை அல்லது அன்னையின் பார்வையிலேயே எதையும் பார்க்க வேண்டும், இனி low consciousness , falsehood போன்றவற்றை பழக்கம், அகந்தை, ஆசை, எதிர்பார்ப்பு என்ற பெயரில் கொண்டு வரக் கூடாது என்று முடிவெடுத்தால் detachment வரும்.
உயர்ந்த சாதனை புரிந்தவர்கள் அனைவரும் இதை தங்களை அறியாமல் செய்தவர்களே. கொள்கையே முக்கியம் என்று இருந்தவர்கள் தான் அப்படிச் செய்து இருக்கிறார்கள். அதை psychological detachment என்கிறார். ஆனால் சாதாரண மனிதனுக்கு மனம், அறிவு ஆகியவற்றிலிருந்து வெளியே வருவது கடினம். உணர்விற்கு வெளியே வருவது முடியாது. உடல் தன் பழக்கத்தை விட்டேக் கொடுக்காது. அந்த இயலாமையில் நாம் என்ன செய்கிறோம் என்றால் அதைப்பற்றிய thinking – சிந்தனை மூலம் – இது வேண்டாம் என்பது போல சிந்தித்து அப்படி சிந்தித்ததாலேயே அதை அடைந்து விட்டதாக நம்புபவர்கள் அதிகம். உண்மையில் அது negative attention கொடுத்து இருக்கும்.
ஒரு சில அன்பர்கள் தாம் detached ஆக இருப்பதால் சந்தோஷமாக இருப்பதாக மையங்களில் பேசிக் கொள்வார்கள். தனிப்பட்ட முறையில் கவனித்தால் அவர் வீட்டில் அவர் தான் பிரச்சனையாக இருப்பார். பேனா முதல், மகன் வரை சாராசரிக்கும் அதிகமான சுயநலமும் attachment -ம் இருக்கும். உதாரணமாக வேலையில் எதிர்பார்ப்பு கூடாது – என்றால் , எதிர்பார்ப்பில்லாமல் எப்படி இருப்பது என்று சிந்திப்போம். மனதில் இருந்து வெளியே வருவதாக நினைத்து மேலும் manahtil ஓட்டிக்கொள்வோம். ஆனால் அறிவு வெளியே வந்து விட்டதாகப் புரிந்துக் கொள்ளும். அந்தத் தவறை நாம் செய்யக்கூடாது.
அப்படி தவறு செய்யாமல் இருக்க கர்மயோகி அவர்கள் கூறும் சில வழிகள்:
1. நம்மை நாமே இரண்டாம் மனிதராக பார்த்து, நாம் எப்படி மனதில், உணர்வில், உடலில், Mechanical -ஆக, unconscious -ஆக செய்து கொண்டிருக்கிறோம் என்பதை பார்த்து கவனித்து புரிந்துக் கொள்ளுதல். அதை விட உயர்ந்த முறையை, பண்பை, conscious ஆக கொண்டு வருதல்.
2. இந்த மனப்பாண்மை, உணர்சிகள், பழக்கங்கள் எப்படி வந்தது என்று பார்த்து அது வந்த வழிகள், அதற்கான காரணங்களை சிந்தித்தால் நம் attachement -கான காரணம் புரியும். அதன் பின்னர் இருப்பது பழக்கங்கள், பழக்கங்கள், பழக்கங்கள் மட்டுமே. (அது அறிவீனம் என்று புரிந்தால் detachment வரும்.
3. அப்படித் தெரியும் குறைகளைப் பற்றி கவலைப்பட்டு அதோடு attach ஆகாமல் அதையும் மீறி நம் அறிவு, விவேகம், செயல் திறன், பலன் ஆகியவற்றை நாம் பெற்ற இடங்களை ஆராய்ந்து பார்த்தல் detachment வரும்.
4. சிந்தனைக்கும், கூர்ந்து கவனிப்பதற்கு இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ளுதல். The difference between thinking and observation . நம்மால் நம் உணர்வுகளிலிருந்து detach ஆக முடியும். அப்படியானால் ஒரு freshness , புதுமை, creativity , படைப்பு சிந்தனை, அடுத்த உயந்த நிலைக்கு போக தேவையான ஆர்வம், அறிவு வரும். அது நம்மை personality மேல் consciouss ஆக அதற்குத் தேவையான பண்புகளை பெற வைக்கும் . இதை detachment from lower is higher attachment என்கிறார். கீழானவைகள் மேல் உள்ள பற்றை அறுப்பது உயர்ந்ததைப் பற்றுவது என்கிறார்.