Share on facebook
Share on telegram
Share on whatsapp

பிறர் நிலைப் பார்வை -2

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் என்னால் ஒரு சிறு உயர்ந்த பண்பை  higher value -வை கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஏற்றுக்கொள்ள தயாராக  இல்லை என்பதை வேறு வேறு வார்த்தையை போட்டு சொல்லிக் கொள்வேன்.  குறிப்பாக எல்லோரும் அப்படித் தான் இருக்கிறார்கள்.  நான் இருப்பதில் என்ன தவறு என்று போய் விடுவேன்.  அல்லது பிறர்  நோக்கம், மனப்பான்மை, உணர்வு, முன்முடிவுகளை குறை சொல்லி என்னை நான் சமாதானப்படுத்திக் கொள்வேன்.  ஆக மொத்தம் other man  piont பார்க்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்வேன்.  சரி இதிலிருந்து வெளியே வருவது எப்படி?

முதலில் கூறியது போல other man point -யின் அடிப்படை நானும் அவரும் ஒன்று தான்.  நாம் நினைப்பது போல நடப்பது போலத்  தான் அவரும் நடக்கிறார் என்று நினைக்காதது.

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நாம் எப்படி நடந்துக்கொள்வோமோ அப்படித் தான் அவரும் நடக்கிறார் என்று நினைப்பது முதல் நிலை.  அப்படி நினைக்கும் போது தான் நம்முடைய முன் முடிவுகள், அபிப்ராயங்கள், பார்வைகள், எதற்கு  முன்னுரிமை (priorities) கொடுக்கிறோம், சுயநலமான சமாளிப்புகள், நியாயப்படுத்துதல், நம்முடைய பிழைப்புக்காக – survivial-க்காக  எது வேண்டுமானாலும் செய்வோம் என்னும் மனநிலை, குணம் சுபாவம் நமக்குப் புரியும்.

அது புரிந்தால் இதையெல்லாம் வாழ்வு நமக்கு காட்டுவது நாம் நம் consciousness -இல் முன்னேறத்தான் என்பதில் நாம் தெளிவாக வேண்டும்.  consciousness -இல் முன்னேற்றம் என்பது வாழ்வில் முன்னேற்றம்.  வாழ்வில் முன்னேற்றம் என்பது சுபிட்சம் – prosperity . அதற்காகவாவது இதை செய்யலாம்.

இதை நாம்  பிரச்சனையாக நினைக்கின்ற நபர்களை கவனித்தால் புரியும்.  Life Repeats என்று சொல்லுமளவிற்கு ஒரே மாதிரி பிரச்சனைகள் தான் நாம் எதிர்கொண்டு இருப்போம்..  ஏமாற்றம், துரோகம், exploitation (இதில் லஞ்சமும் அடங்கும்) திறமை இல்லாத ஆட்கள் என்று திருபத் திரும்ப ஒரே மாதிரி ஆட்கள் தான் நம் முன் வருவார்கள்.  அதற்கு வாழ்க்கை நம்மை higher consciousness-க்கு   வர ஏதோ ஒரு உயர் பண்பை பெற சுட்டிக் காட்டிக்கொண்டு இருக்கிறது என்று பொருள்.  அதற்கான ஞானத்தை தர வருகிறது என்று பொருள்.  அது நம்முடைய prejudice , opinion -ஐ உடைக்க வந்திருக்கிறது என்று பொருள்.

அதை mind level -லிலேயே சரி செய்தால் அது சுலபம்.  எந்த higher conciousness -ஐ எடுத்துக்கொள்ள வேண்டும், அல்லது அன்னைக்கு பிடித்த எந்த பண்பை கொண்டு வரவேண்டும் என்று நினைத்தால், அதை செய்தால் mind -இல் சரி செய்வது.  அது நினைவில் வந்த உடனேயே நிறைய விஷயங்கள் மாறும்.  அதை பிரார்தனையுடைய பலன் என்று நினைப்போம்.  அதைத்தாண்டி நம்முடைய எந்த செயல், மாற்றம், இதை பலிக்க வைத்துள்ளது என்று பார்த்தால் அது புரியும்.

அந்த நிலையை  நாம் உதாசீனப்படுத்தி  விட்டால் அது உணர்வு.  உணர்ச்சியில் அடி வாங்க வைத்து வாழ்வு நம் கவனத்தை ஈர்க்கும்.  அப்போது வேறு வழியில்லாமல் அதை ஏற்றுக்கொள்வோம்.  ஆனால் அதற்கான ஞானத்தை நாம் பெறாததால் மறுபடியும் அப்படிப்பட்ட மனிதர்கள் நம் வாழ்வில் வர வாய்ப்பிருக்கிறது.

அப்படியும் நாம் மாறவில்லை என்றால் உடலில் தகராறு, வாய்ச்சண்டை, அடிதடி என்று வந்து அதனுடடைய  பலன் பல காலம் நினைவில் இருப்பது போல  வரும்.  அது அந்த ஞானத்தைத் தரும்.

நம் வாழ்வே, பரிணாமத்தில் முன்னேற – அதன் சாரமாக – அனுபவங்களின் தொகுப்பு என்று மாறிய பிறகு, ஒவ்வொரு விஷயத்திலும் நாமே அதை பார்த்து விடுவது காலத்தை சுருக்கி உயர் அனுபவங்களை, உயர் சித்தத்தை தரும் என்பது தத்துவம்.

வருவது அனைத்தும் அன்னையே, வருபவரெல்லாம் அன்னையே என்பது other man point -க்கு சிறந்த வழி என்று கர்மயோகி அவர்கள் கூறுகிறார். 

other man point -க்கு அவர் தரும் சில உதாரணங்களைப்  பார்த்தால் எந்த அளவிற்கு அவர் அதைப் பற்றி  கூறியிருக்கிறார் என்பது புரியும்.  நான்கு பேர் உட்கார்ந்து இருக்கும் bench -இல் காலாட்டாமல் இருப்பது, வயதானவர்களை பார்க்க போகும் போது கண்ணை உறுத்தும் வண்ணத்தில் உடை அணியாமல் இருப்பது, பிறர் பேசும் போது குறுக்கே பேசாமல் இருப்பது, சாப்பிடும் போது பிறர் அறுவறுக்கத் தக்க வகையில் சத்தம் போட்டோ, வழித்தோ சாப்பிடாமல் இருப்பது என்று ஒவ்வொரு வினாடியும் conscious -ஆக இருக்க வேண்டும் என்னும் அளவிற்கு other man point -ஐ பற்றி சொல்லி இருப்பார்.  நாம் எங்கே இருக்கிறோம் என்று யோசித்தால் நம்மை பற்றி புரியும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »