Share on facebook
Share on telegram
Share on whatsapp

பிறர் நிலைப் பார்வை -1

கர்மயோகி அவர்கள் பிறரை குறை கூறாதே – never complain – என்று கூறும் வரிகளில் இருந்து other man point ஆரம்பிக்கிறது.  உள்ளே வேலை இருக்கிறது என்பதற்கான முதல் நிலை அதுவே  என்று கூறுகிறார்.  பிறரை குறை கூறுதல் என்பது வெளியே பார்ப்பது.  அது நம்முடைய பிரதிபலிப்பு என்று நினைத்தால் உள்ளே வேலை செய்ய வேண்டும்.  வெளியே பார்த்தால் ஏதாவது ஒரு மனக்கசப்பு முரண்பாடு வரும் – உள்ளே பார்த்தால் சுமுகம் , harmony வரும்.  அது அன்னை விரும்பும் பண்பு, இப்படி ஒவ்வொரு நபரிலும், உறவிலும் அன்னை விரும்பும் பண்பை பார்ப்பது, செய்வது other man point .  நம்முடைய பார்வையில் பார்ப்பது mind -ஐ உபயோகப்படுத்துவது.  other man point -இல் பார்ப்பது supermind -ஐ செயல்படுத்துவது.

இவை எல்லாம் சொல்வதற்கு நன்றாக இருக்கிறது.  ஆனால் செய்ய முடியவில்லை.  காரணம் அப்படி ஒரு குணம், நடத்தை எல்லாம் என்னிடம் இருப்பது போல் இல்லை.  அதனால் என்னை நானே  ஆராய்ந்து பார்த்து கண்டு பிடித்தது – என்னுடைய இந்த அபிப்ராயம் தான், முடிவு தான் முதல் தவறு. 

எந்த conflict -disharmony , முரண்பாடு சுமுகக்குறைவு வந்தாலும் மேலோட்டமாக பார்க்கும் போது என்னுடைய குறையே தெரியாது.  Deep analysis செய்யும் போது தான் அதனுடைய விதை என்னிடம் இருப்பது தெரியும்.  பெரும்பாலும் அந்த எதிர்ப்பு, பகை எங்கு ஆரம்பிக்கும் என்றால் என்னிடம் ஒரு குறை ஒரு குற்றம் இருக்கும் போது குறிப்பாக அதை மறைக்க நினைக்கும் போது முரண்பாடு ஆரம்பிக்கிறது. அது திறமை குறைவாக, திறன் குறைவாக, மனநிலை, உணர்ச்சிக் குறைவாக (temperament-ஆக) இருக்கலாம்.  அல்லது என் தவறு வெளியே தெரியக்  கூடாது என்பதாக இருக்கலாம்.  அல்லது நான் நினைப்பது நடக்க வேண்டும் என்னும் பிடிவாதம் வீறாப்பாக இருக்கலாம். அதே போல என்னால் ஒரு காரியத்தை செய்ய முடியாத போது பிறர் உதவி கேட்பது அல்லது  அந்த காரியத்தை அவர் சிறப்பாக செய்து என் அகந்தையை  தொட்டால் அது எரிச்சலைக் கொடுத்து other man point -ஐ  பார்க்க விடுவதில்லை. 

இன்னொரு இடம், மிகுந்த ஆபத்தான இடம். சரியென்று நினைப்பது, பிறருக்கு நல்லது என்று நினைப்பது, நல்லது செய்கிறோம் என்று நினைப்பது, பெரும்பான்மையான அபிப்ராயத்துக்கு (popular belief ) எதிராக நான் செய்வது, எல்லாவற்றுக்கும் மற்றவர் ஒத்து வரவேண்டும் என்று நினைப்பது .  குறிப்பாக மற்றவர்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கிற இடங்களில் கூட அது நான் நினைத்த வகையில் தான் அவர்களுக்கு வர வேண்டும் என்று நினைப்பது இந்த மாதிரி இடங்கள் எல்லாவற்றிலும் என்னால் other man point பார்க்க முடிவதில்லை.  என்ன செய்தாலும் என் செயல்கள் தான் சரியென்று நியாப்படுத்தி பார்க்கிறேன்.  அப்படி உள்ளே போய் பார்த்தாலும் என்னுடைய காரணம் தான் rationalize ஆகிறதே தவிர other man point வரவில்லை.  குறிப்பாக என்னை விட பிறர் ஒரு விஷயத்தை சரியாக பார்த்து, கணித்து செய்தால், என்னுடையது தான் சரி ஆனால் ஏதோ அதிர்ஷ்டம் அவர் பார்வை சரியாக வந்து விட்டது என்று நினைக்க முடிகிறதே தவிர surface level -லில் கூட அவர் திறமையை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.  அங்கே எல்லாம் என்னோட காரியமாகவே இருந்தாலும் கூட அது நடந்துவிடக் கூடாது என்று சில சமயம் நினைப்பதுண்டு.

எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கு இயல்பாவே இருக்கக்கூடிய ஒரு defence mechanism என்னுடைய அகந்தை, உணர்ச்சி, ego and sensitiviy தொடப்படும் இடங்களில் என்னால் other man point பார்க்க முடியாது.  நான் இருக்கும் நிலையில்  நான் செய்வது  தான் சரி என்று ரொம்ப அடக்கமாக எனக்கு நானே சொல்லிக் கொள்ள தோன்றுகிறது.

இதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைக்கும் போது தான் correspondence , other man point எல்லாம் நமக்கு வெகு தூரம், நாம் இன்னும் அதன் அடிப்படை அருகே கூட வரவில்லை என்று புரிகிறது.  அப்படி நான் புரிந்து கொண்டது என்ன என்றால் – எப்படி இந்த மாதிரி எண்ணங்கள், அபிப்ராயங்கள், comfort zone , defence mechanism என்னிடம் இருக்கிறதோ அப்படித்தான் எல்லோரிடமும் இருக்கும்.  எல்லோரும் தனக்கு எது சரியென்று படுகிறதோ அதைத் தான் செய்கிறார்கள்.  தெரிந்தே செய்யும் தவறை கூட என்னை போன்றே அகந்தையின் திருப்திக்காகவே செய்கிறார்கள்.  அந்த அடிப்படையான other man point -ஐ க்கூட என்னால் பார்க்க முடியவில்லை.  என்னுடைய defence mechanism அதை ஏற்றுக்கொள்வதில்லை.  அது முரண்பாடு, ஒத்துழையாமை, கோபம், எரிச்சல், அல்லது சில சூழல்களை, உண்மைகளை எதிர்கொள்ள தைரியமில்லாமல் பொய்யாகவோ சண்டை என்றோ  மாறுகிறது. 

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »