அன்னையுடன் அரை மணி நேரம்:
அன்னைக்கு ஏற்றார் போல நம் சுபாவம் நடத்தை மாற வேண்டும் ஒரு ஒழுங்கு வரவேண்டும் என்பதே அதன் அடிப்படை. உதாரணமாக நான் தாம்பரத்திற்கு ஒரு வேலையாகச் செல்வதனால் கிண்டி யில் ஒரு டீக்கடையில் என் நண்பர்கள் கூடும் இடம் ஒன்று இருக்கும். அங்கு சென்று டீ வடை சாப்பிட்டு விட்டு கொஞ்சம் கதை அடித்து விட்டு செல்வேன். அதை அன்று காலையில் அன்னையிடம் சொல்வதனால் – மதர் தாம்பரத்திற்கு ஒரு discussion கு செல்கிறேன் வழியில் நண்பர்களை பார்த்து டீ வடை சாப்பிட்டு கதை அடித்து விட்டு செல்கிறேன் என்று கூற முடியாது. அன்னையிடம் சொல்ல முடிந்தது மட்டுமே சொல்லுவோம்.அன்னையிடம் சொல்லிவிட்டு அதை அப்படியே செய்ய வேண்டும் என்பதால் இப்படியெல்லாம் தேவையற்ற வேலைகள் செய்ய மாட்டோம், சுருக்கமாக சொல்லவேண்டி இருப்பதால் நம் வேலையில் என்ன செய்ய வேண்டி இருக்கும் என்ன பேச வேண்டும் என்னும் தெளிவு வரும். அது நம் திறமையை அதிகப்படுத்தும். இது பிரார்த்தனைச் செய்யும் இடமல்ல. மாறும் இடம். நிறைய முறை நான் அன்னையிடம் சொன்ன dialogue ஐ அப்படியே எதிரில் இருப்பவர் பேசுவதை கேட்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.
காலையில் உட்காரும்போது அன்றுச் செய்யப் போவதை முழுதும் சொல்ல வேண்டும் அப்படியே செய்ய வேண்டும் என்பது எனக்கு சற்று கடினம். வியாபாரத்தில் அதை முன் கூட்டியே சொல்வது கடினம்.
அதனால் நான் அதை செய்வதில்லை. மாலையே சிறந்தது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைப்பவரானால் 2 நேரத்தில் நடந்தததை நினைத்துப் பார்க்க 5 நிமிடம் ஆகும். 12 மணி நேரத்திற்கு 30 நிமிடம் ஆகும். இன்னும் விலாவாரியாக நினைப்பது உங்கள் விருப்பம். அன்னைக்குப் பிடித்த மாதிரி என்ன செய்தேன் என்பதை பார்த்து அதை மறுநாள் ஒரு இழை உயர்த்துவதும், அன்னைக்கு எதிராக என்ன செய்தேன் என்பதைப் பார்த்து அதை மறுநாள் ஒரு இழை குறைப்பதும் இதன் அடிப்படை. நம் சுபாவம் மாற வேண்டும் , அறிவில், உணர்வில் – நம்மிடம் இல்லாத திறமை , திறன், ஆகியவற்றை தெரிந்து கொண்டு அதை பெறுவதே இதன் முக்கிய நோக்கம்.
அன்னை அருள் என்பது பரிணாம முன்னேற்றத்திற்கானச் சக்தி என்பதால் அவருடைய பன்னிரண்டு அம்சங்களில் எதை நாம் நேரடியாக பயன்படுத்தினாலும் அது நம் ஆன்மாவின் உறுதி -will- என்பதால் அவை பலமடங்கு அதிர்ஷ்டத்தையும் அருளையும் கொண்டுவரும். ஆனால் அந்த நிலையை நாம் அடைய முடியாதபோது அம்சத்திற்கு உரிய பண்புகளை வெளிப்படுத்தும் போது அதே பலனைப் பெறலாம் என்கிறார் கர்மயோகி அவர்கள். “values are spiritual skills that invokes the Spirit”
உதாரணமாக “truth” என்பது ஒரு அம்சம். சாதாரணமாக பொய் சொல்லக் கூடாது என்பதில் இருந்து, நேர்மையின் பல வடிவங்கள் வரை : உம்-சின்சியாரிட்டி, பரந்த மனபான்மை, சுயநலமின்மை, என்று ஒரு துளி பொய்யும் கலக்காத நிலை வரை . {கர்மயோகி அவர்கள் சொல்லும் ஒரு நிலை. வியாபார ரகசியத்தை வியாபார-போட்டியாளரிடம் சொல்லவேண்டும்} என்று “truth”இன் பல பரிமாணங்களையும் பின்பற்றினால் கணம் தோறும் அதிர்ஷ்டம் .
சரி. இதை எங்கு இருந்து ஆரம்பிப்பது என்று கேட்டால் நம்மிடம் இருந்தே ஆரம்பிக்கலாம். நம்மிடம் உள்ள நாம் நினைக்கும் உயர்ந்த பண்புகள் , நம்மை சுற்றி உள்ளவர்களின் உயர்ந்த பண்புகள், சமுதாயத்தின் உயர்ந்த பண்புகள் என்று நாம் அறிந்த உயர் பண்புகளை லட்சியமாக கடைபிடிக்க ஆரம்பித்து தினம்தோறும் அந்த உயர்ந்ததில் இருந்து மேலும் உயர்ந்ததிற்கு செல்வது பரிணாம வளர்ச்சி. “Going to higher consciousness”.
அதனால் ஆன்மாவின் பண்புகளை அதிக பட்சமாக கடைபிடிப்பதே அதிக பட்ச அருளை பெற வழியாகும்.
அதற்கு ஆரம்ப புள்ளி – அன்னையுடன் அரை மணி நேரம்.
முதலில் புரிந்து கொள்ள வேண்டியது இது பிரார்த்தனைக்கான நேரம் அல்ல. திருவுருமாற்றத்திற்கான நேரம்.அறிவு மாற்றம்,உணர்வு மாற்றத்திற்கான நேரம். அருள் என்பதை கர்மயோகி பலவகையில் define செய்து இருக்கிறார். அதில் ஒன்று – “Grace is Sincerity of Mother ” . உயர்ச்சித்தத்தை திருவுருமாற்றத்தை விரும்புவர்களுக்கு என் உதவி தேடி வரும் என்கிறர் . அவர் வார்த்தையை அவரே மீற மாட்டார். அப்படி அருளை வரவழக்கும் ஒரு முறை இது. இதுவும் ஒரு வகை கயமையே என்றாலும் அன்னையை நோக்கி எடுத்து வைக்கும் ஒரு அடி என்பதால் , அன்னைக்காக என்னும் அளவில் இதை ஏற்றுக் கொள்ளலாம் என்கிறார்.