அன்னையிடம் வந்த பிறகு ஆரம்பத்தில் பெற்றது, இப்போது பெறுவது, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அதன் தரம் புரியும். அதன் மூலம் நமக்கும் அன்னைக்கும் இருக்கும் தூரம் புரியும். அதன் மூலம் நாம் நம் சின்சியரிட்டி-ஐ புரிந்துக் கொள்ளலாம் என்கிறார் ஸ்ரீ கர்மயோகி. அது அன்பர் அடுத்த கட்டத்திற்குச் செல்வது என்கிறார்.
இதை எப்படி புரிந்துக் கொள்வது?
அன்னைக்கும் நமக்கும் இருக்கும் இடைவெளி குறைவானால் அன்றாடம் அன்னை பலித்ததை பேச முடியும். இல்லை என்றால் என்றோ நடந்ததைப் பற்றி மட்டுமே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்போம். அதை உற்றுப் பார்த்தால் ஆரம்பத்தில் இருந்த பக்தி இன்று முறைகளாக மாறி விட்டதும் அந்த முறைகளையும் அன்னைக்காக பின்பற்றாமல் பரிணாமத்தில் முன்னேற பின்பற்றாமல் அகந்தையை திருப்தி படுத்த ஆரம்பித்தவுடன் prosperity என்பதே பிறருக்கு காட்டத்தான் என்று ஆன பிறகு relationship with Mother-தூரமாகி falsehood-க்கு, involution-க்கு போகிறோம். அன்னையை அன்னைக்காக பின்பற்றாமல் பிறருக்காக பின்பற்றும் அறியாமையில், இருளில் மூழ்குவதே தெரியாமல் மூழ்குகிறோம். அதையே ரசிக்கிறோம்.
அன்னையிடம் சின்சியரிட்டி என்பது மேலும் மேலும் ஆழத்திற்கு போய் நம் அகந்தையை அது வெளிப்படும் அத்தனை நிலைகளையும் (plane where it is expressed) விலக்கி அன்னைக்கு பிடிக்காதது எதையும் செய்ய மாட்டேன் என்ற நிலைக்கு வருவது sincerity.
அதற்கு ஸ்ரீ கர்மயோகி சொல்லும் ஒரு வழி:
- கடந்த பத்து நாட்களை எடுத்துக்கொள். உன் பார்வையில் வெற்றி பெற்றவர்களை, நண்பர்களை, உறவுகளை கவனி.
- அதே போல் தோற்றவர்களை கவனி.
- எல்லோரும் தவறு என்று சொல்வதை செய்து விட்டு, தான் செய்ததே சரி, என்னிலையில் எல்லோரும் இதையே செய்திருப்பார்கள் என்று வாதிடுபவர்களை கவனி.
- Complaining ஆக காதில் விழுந்தது, விதி, ஜாதகம், துரதிர்ஷ்டம், அன்னை முறைகளைப் பற்றிய குறைகள், விமர்சனங்கள், மற்றவர் முன்னேற்றதை பற்றிய தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவற்றை கவனி.
- இதை எல்லாம் கவனிக்கும் போது இவர்கள் எல்லாம் இந்த இடத்தில் தவறு செய்துவிட்டார்கள் என்று நமக்குத் தோன்றும் இடங்கள் எல்லாம் நாம் தவறு செய்துக் கொண்டிருக்கும் இடங்கள். நாமும் அதே போன்ற தவறை செய்துக் கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.
- இது தவிர அன்னையிடம் வைக்கும் prayers, அதற்கு நாம் போடும் conditions, ( can you formulate a prayer in a single line?
- ஒரு பெரிய விஷயம் நடந்த போது அதை முதலில் யாரிடம் சொல்ல நினைக்கிறோம்,
- சித்த மாற்றம் Reversal of Consciousness -ஐ எந்த அளவு ஏற்கிறோம்.
- கடந்த கால சமர்ப்பணம் Past consecration-இல் எந்த அளவு உண்மையாக இருக்கிறோம்.
- அன்னையுடன் அரை மணி நேரம் Half an hour with Mother-morning and evening-நம்மால் செய்ய முடிகிறதா?
- Darshan day, Birthday, Prosperity day- நாம் எடுக்கும் தீர்மானங்கள் ,
- அன்னையிடம் ஒரு இக்கட்டான தருணத்தில், முக்கியமான தருணத்தில் நாம் செய்த சத்தியங்கள்.. Special promises made to Mother on special occasions and on critical situations.
இது தவிர பொய் சொல்லி சங்கடத்தில் மாட்டியது, தெரியாததை தெரியும் என்று சொல்லி அறைகுறையாக சமாளித்தது, அன்னையிடம் வந்தபிறகு இதையெல்லம் நாம் இழந்து விட்டோமே என்று நினைத்தது, தவறு என்று தெரிந்தும் கூட அடுத்த முறை மாற்ற முடியாதது என்று கணக்கில் அடங்கா இடங்களில் நாம் அன்னையை விட்டு விலகி இருக்கிறோம்.
இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் நமக்கும் அன்னைக்கும் இருக்கும் தூரம் புரியும். நாம் எந்த அளவு அறியாமையில் மூழ்கி ஜடமாக, ஜீவனற்று இருக்கிறோம் என்பதைக் காட்டும். நாம் செய்வது அத்தனையும் -நம் அப்பிராயங்கள் , நம்பிக்கைகள், மரபு வழிகள் முன் முடிவுகள், விருப்ப சார்புகள் ( Based on our preferences, beliefs, traditions, habits, opinions, prejudice) -ஐ ஒட்டித்தான். அத்தனையும் செய்து விட்டு அன்னை பலிக்கவில்லை என்றோ நமக்கு அம்சம் இல்லை என்றோ சொல்லிக் கொள்வோம்.
அன்னையிடம் இருந்து பலவும் பெற்றுக்கொண்டு பதிலுக்கு எதையும் தராத கயமை இது . அன்னைக்கு ஏற்றபடி என்னால் இருக்க முடியவில்லை என்று சொல்வது மிகப் பெரிய கயமை என்கிறார் ஸ்ரீ கர்மயோகி.
கயமையை மனமார செய்கிறோம் (We are sincerely insincere to Mother)-என்று புரிவது அன்பர் அடுத்த கட்டத்திற்குச் செல்வது.
இதில் இருந்து வெளியே வருவது sincerity. அன்னையின் சக்திக்கு நம்மை தருவது, அவர் முறை, அவர் விருப்பம் ஆகியவற்றை நம், மனம், உறவு, உடலில் ஏற்றுக்கொள்வது – நாம் அடுத்த கட்டத்திற்கு செல்வது. அப்படி நம்மை organize செய்வது அன்னையின் விருப்பம் மட்டுமே நம்மால் வெளிப்பட உதவுவது.அப்போது தான் நம்மை நாம் sincere Devotees என்று சொல்லிக்கொள்ள முடியும்.
அருள் என்பது அன்னையின் சின்சியாரிடி – நம் சின்சியாரிடி-கு அன்னையின் நன்றி அறிதல் என்கிறார் கர்மயோகி அவர்கள். நம் சின்சியாரிடி -யின் நிலை அருளின் அளவை நிர்ணயிக்கும் என்கிறார். (The level of sincerity shown to Mother determines the level of Grace we receive.)
- முதல் நிலை அது கர்மத்தை விலக்கும்.
- இரண்டாவது நிலையில் அறியாமையில் இருந்து வெளி வர வைத்து நம்முள் மறைந்துள்ள திறமைகளை வெளி கொணரும். சுபிட்சத்தை அதிகமாகும்.
- மூன்றாவது நிலையில் புது திறமைகளை உருவாக்கி உருவாக்கி ஆர்வத்தையும் , படிப்பாற்றலையும் ( aspiration & creativity) உருவாக்கி சாதனை புரிய வைக்கும்.