Share on facebook
Share on telegram
Share on whatsapp

மாற்றம் – Shift

நம் பிரார்த்தனைகளை எல்லாம் நிறைவேற்றுவது மட்டுமே அன்னையின் வேலை அல்ல. அவருக்கும் ஒரு நோக்கம் உண்டு. அது திருவுருமாற்றம்.

ஸ்ரீ கர்மயோகி சொல்வது, “நம் பிரச்சினைகளுக்கு நம்மிடம் ஒரு மனமாற்றம் தேவை என்ற அவசியத்தை உணராமல் நாம் எப்படி இருந்தாலும் அன்னை நமக்காக எல்லாம் செய்வார் என்று இருந்தால் வீணாக காத்திருந்து ஏமாற நேரிடலாம். அன்னை உன் ஆசையை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது நீ அன்னையின் லட்சியங்களை எல்லாம் பூர்த்தி செய்ய வேண்டும். அன்னை விதித்த நிபந்தனைகளை எல்லாம் நாம் பூர்த்தி செய்யாவிட்டாலும் நம் எண்ணங்களை எல்லாம் அன்னை பூர்த்தி செய்வார் என்பது அர்த்தமற்ற எண்ணம்”.

முதல் நிலையில் எவருடைய அழைப்பையும் ஏற்றுக் கொள்ளும் அன்னை அடுத்தடுத்த நிலையில் அந்த நிலைக்குரிய நிபந்தனைகள் ஒரு இழை பாக்கி இருந்தாலும் பதில் சொல்ல மாட்டார். அன்னையை அடுத்தடுத்த கட்டங்களில் அடைய விரும்புவோர்க்கு தேவை Shift.

அந்த shift – க்கு தேவை முதற்கட்டமாக அன்னையின் பண்புகளுக்கு மாறுவது.

“என்னை வழிபடுவதில் நான் திருப்தி அடைவதில்லை.எனக்கு தேவை திருவுருமாற்றம். அதற்கான முயற்சிகளை எடுப்பதற்குத் தயங்குபவர்கள் தான் வழிபாடே போதும் என்று இருக்கிறார்கள்.” என்கிறார் அன்னை.

ஸ்ரீ கர்மயோகி சொல்வது என்னவென்றால், “நம்மிடையே அன்னைக்கு பிடிக்காத ஒரு குணம் இருந்தால் அதை வெளியே காட்ட வெட்கப்படுகிறோமே தவிர அதை மாற்ற விரும்புவதில்லை. உண்மையில் அதை விரும்புகிறோம் ரசிக்கிறோம் என்பதே உண்மை. உண்மையில் விடமுடியாத குணங்கள் விடப்பிரியப்படாத குணங்கள் “என்கிறார்.

எதற்கும் ஒரு ஆரம்பம் தேவை என்பதால் அத்தகைய பண்புகளுக்கு மாறுவதற்கு மிக எளிய வழியாக ஸ்ரீ கர்மயோகி சொல்வது,” இந்த நிமிடம் முதல் நமக்கு எது உயர்ந்ததாக தெரிகிறதோ அந்த அளவு உயர்வான முறையில் செயல்படல், ஒவ்வொரு நிலையிலும் நாம் மனசாக்ஷி என்று சொல்லும் அளவில் நல்லது கெட்டது என்று இருக்கும் அதில் நல்லதை மட்டுமே செய்தல், நம்மளவில் நல்லவர் என்று நாம் நினைப்பவர் செய்ய அஞ்சும் செயல்களை செய்யாமல் இருத்தல் முதலியவையே அவை. அதன் பிறகு தேவைப் படுவது:

• கவனமற்ற கவலையற்ற மனநிலையில் இருந்து பொறுப்பான லட்சியமான மனநிலை
• மனம் ஒரு நிலையில் இல்லாமல் இருப்பதிலிருந்து லட்சியமே குறி என்ற நிலை.
• ஆசை, கோபம், எரிச்சல் , வந்து பிறகு அடங்குவது-ல் இருந்து நிதானமான சம சீர் நிலை.
• பிரச்சினை வந்தால் மட்டுமே அன்னை நினைவு என்றில்லாமல் இடையறாத அன்னை நினைவு.
• சூழலை கவனிக்காமல் இருப்பதில் இருந்து சூழலை சூட்சுமமாக கவனிப்பது.
• வேலையை ஆரம்பித்தபின் சமர்ப்பணம் செய்வதில் இருந்து சமர்ப்பணமே முதற் கடமை முடிவும் சமர்ப்பணமே என்று மாறுவது –

முதலியவை தேவையான அடிப்படை மாற்றங்களாகும்.

திரு கர்மயோகி சொல்லும் பல்வேறு வகையான personality மாற்றங்களில் இருந்து இதை சுருக்கமாக சொல்வது என்றால்
“we have to change from Silly (தாழ்ந்த மனநிலை) , Shabby ( சிறு பிள்ளைதன்மான) shallow (அர்த்தமற்ற) personality இல் இருந்து. Serious, Systematic, Sound personality. 3s-to-3s.

சூழலை கவனிப்பது என்பது முதல் நிலையில் conscious acceptance of Mother by watching. அன்னையை வழிபட ஆரம்பித்ததிலிருந்து நம் வாழ்வில் ஏற்பட்ட மாறுதல்கள் இதுவரை எவர் வாழ்விலும் ஏற்படாத மாறுதல் என்பதை உணர்ந்து, ஏன் அன்னையிடம் மட்டும் இது நடக்கிறது என்று யோசிப்பது மற்றவர்க்கு பலிப்பது நமக்கு ஏன் பலிக்கவில்லை என்று சிந்திப்பது, அது பற்றி அன்னை சொல்லியவற்றை அறிய முனைவது அதன் மூலம் பலிக்காதவற்றை பலிக்க வைப்பது என்பதே முதல் நிலையில் conscious acceptance என்று எடுத்துக் கொள்ளலாம்.

அது போல முதல் நிலையில் சமர்ப்பணம் என்பதை ஒவ்வொரு செயலிலும் என் விருப்பம் எது அன்னையின் விருப்பம் எது என்று யோசித்து அன்னையிடம் சொல்லி பிறகு செய்வது (half an hour with Mother).
அன்னை முறைகள் பொங்கி வழிந்தால் சமர்ப்பணம் கூடிவரும்.
நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் அன்னை அருளை வெளிப்படுத்த உதவும் கருவிகள் என்று நினைப்பது சமர்ப்பணமாகும்.

Author Info
Ramesh Kumar

Ramesh Kumar

SHARE
Share on facebook
Share on telegram
Share on whatsapp

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »

More Articles

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 5

இதுவரை சொன்னவை அனைத்தும்   “உயர்ந்தவை நிர்ணயிக்கின்றன. அவை நிறைவேற தாழ்ந்தவை உதவுகின்றன” – என்னும் லைப் டிவைனின் ஒரு  கருத்தை அடிப்படையாக கொண்டது. இங்கு தலைப்பில் இருந்து விலகிச் செல்லாமல் எழுத வேண்டும் என்று

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை – 4

இதுவரை நாம் பேசியதை Life Divine – கருத்துகளில் பொருத்தி பார்க்கும் போது – முன்னேறும் பாதையின் நன்கு  நிலைகளை.  – மனித வாழ்வு, யோக வாழ்வு, தெய்வீக வாழ்வு என்று மூன்று பகுதிகளாகப்

Read More »

இறைவன் இறங்கி வரும் நிலை மனிதன் உயர்ந்து செல்லும் நிலை  – 3

அதற்கு பதிலாக ஒரு பண்பை எடுத்துக் கொண்டு, அதன் பார்வையில் நம் முடிவை organise செய்ய முடிந்தால், அது நம் அனைத்து  முடிவுகளுக்குக்  காரணமாக அமைந்தால், அது படைப்பாற்றல் மிக்கதாக இருக்கும்.  உதாரணமாக முன்

Read More »